15.08.2025 அன்று நடைபெற உள்ள கிராம சபை கூட்ட முக்கியத் தீர்மானம்.

 15.08.2025 அன்று நடைபெற உள்ள கிராம சபை கூட்ட முக்கியத் தீர்மானம்.

Click here




பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06

முன்னிலை : திருமதி ச.சுகன்யா (மு.கூ.பொ)

ந.க. எண். 031/ஆ2/2025. நாள்: 11.08.2025

பொருள்:

பார்வை:

பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம். சென்னை-06 புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-27" 2025-26ஆம் ஆண்டு செயல்பாடுகள்-15.08.2025 அன்று நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டம் "முழு எழுத்தறிவு பெற்ற நகர /கிராம பஞ்சாயத்து" என்கிற இலக்கை அடையும் வகையில் தீர்மானம் நிறைவேற்றக் கோருதல் - சார்பு

1 மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் 2022-23, பள்ளிக் கல்வித் துறை மான்யக் கோரிக்கை எண் 43, அறிவிப்பு எண். 34. நாள் 11.04.2022

2 2025-26ஆம் ஆண்டிற்கான புதிய பராத எழுத்தறிவுத் திட்டஏற்பளிப்புக் குழு கூட்ட (PAB) நாள் 18.03.2025

3 இவ்வியக்கக இதே எண்ணிட்ட கடித 15.46. отобот

031/2/2025, : 28.06.2025

cckkalviseithikal

தமிழ்நாட்டில், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் வாயிலாக அனைத்து 38 மாவட்டங்களிலும் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டச் செயல்பாடுகள் தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பார்வை-3இல் காணும் செயல்முறைக் கடிதங்களின்படி, 15 வயதிற்குக்கு மேற்பட்ட எழுதப்படிக்கத் தெரியாத அனைவரையும் முழுமையாகக் கண்டறிந்து அவர்கள் அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிடும் செயல்பாடுகள் 15.07.2025 முதல் அனைத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டங்களிலும்

15 குறிப்பாக, அனைத்து நகர மற்றும் ஊரகப் பகுதிகளில், வயதுக்குமேற்பட்ட எழுதப்படிக்கத் தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கித் திட்டக் குறிக்கோள்களை உரிய காலத்திற்குள் எட்டிடும் வகையிலும், மாநிலத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக விரைவில் மாற்றிடவும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்வது தற்போது மிகவும் அவசியமாகிறது.

இதன் தொடர்ச்சியாக வருகின்ற 15.08.2025 அன்று அனைத்து நகர மற்றும் கிராம பஞ்சாயத்துகளிலும் நடைபெற உள்ள கிராம சபை கூட்டங்களில்

cckkalviseithikal

"முழு எழுத்தறிவு பெற்ற நகர /கிராம பஞ்சாயத்து" என்கிற இலக்கை அடையும் வகையில் பின்வருமாறு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.

எங்களது.. நகர / கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் உள்ள 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப்படிக்கத் தெரியாத அனைவரையும் முழுமையாகக் கண்டறிந்து அவர்களை அரசு / அரசுஉதவி பெறும் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகின்ற எழுத்தறிவு மையத்தில் சேர்த்து, அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கி அவர்கள் அனைவரையும் எழுத்தறிவு பெற்றவர்களாக ஆக்குவதன் வாயிலாக எங்களது நகர/கிராம பஞ்சாயத்தை "முழு எழுத்தறிவு பெற்ற நகர/ கிராம பஞ்சாயத்தாக" விரைவில் மாற்றுவோம்

எனவே, முன்குறிப்பிட்டுள்ளபடி, தீர்மானம் நிறைவேற்றுவதற்கான உரிய நடவடிக்கைகளை தவறாது மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மேற்கொள்ளப்படும் தீர்மானங்களின் தொகுப்பு அறிக்கையை உரிய புகைப்பட ஆவணங்களுடன் 30.08.2025-இவ்வியக்ககத்திற்கு சமர்பித்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Post a Comment

0 Comments