14 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு.
Click here
cckkalviseithikal
பார்வையில் கண்ட அரசாணையில் 2025-2026 ஆம் கல்வியாண்டில் 14 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி /மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளை அரசு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயரத்தி வெளியிடப்பட்ட அரசாணையின் நகல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இதனடிப்படையில் இப்பட்டியலில் உள்ள 14 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக செயல்பட தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட அரசாணையின்படி தோற்றுவிக்கப்பட்ட / நிலை உயர்த்தப்பட்ட பணியிடங்களுக்கான ஊதியம் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிதி தலைப்பின் கீழ் பெற்று வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
அளவு நிலை உயர்த்தப்படும் உயர்நிலைப்பள்ளிகளில் போதிய மாணவர்களின் எண்ணிக்கையுடன் வகுப்புகள் தொடங்கப்பட்டமைக்கான அறிக்கையினையும் இச்செயல்முறைகள் பெற்றுக் கொண்டமைக்கு ஒப்புதலிணையும் உடன் அனுப்பிட சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு: அரசாணை நகல்


0 Comments