ஒரே பள்ளியில் படித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர்

 ஒரே பள்ளியில் படித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர்.




தர்மபுரி, நல்லம் பள்ளி அருகே உள்ள ஏலகிரி அரசு பள்ளியில் படித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா. தம்பிகள் என அடுத்தடுத்த ஆண்டுகளில் 3 பேர், 7.5 சதவிதம் உள் இடஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் பயில தேர்வாகி உள்ளனர்.


தர்மபுரி மாவட்டம். நல்லம்பள்ளி தாலுகா பாகலஅள்ளி ஊராட்சி தண்டுகாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குழந்தை, விவசாயி, இவரது மனைவி மாதம்மாள். இவர்களுக்கு சந்தியா என்ற மகளும், ஹரிபிர சாத், சூரியபிரகாஷ் என 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் 3 பேரும், ஏலகிரி அரசு மேல்நிலைப்பள் ளியில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தனர். மாணவி சந்தியா கடந்த 2021-22ம் ஆண்டில் நீட்ஸதேர்வில் தேர்ச்சி பெற்று,


கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் படிப்பிற்கு தகுதிபெற்றார். தற்போது 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தம்பி ஹரி பிரசாத், கடந்தாண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்று, சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.


இவர்களது தம்பி சூரியபிரகாஷ், நடப்பாண்டு (2024-25) நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, நேற்று நடந்த சுலந்தாய்வில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க தகுதி பெற்றுள்ளார். 


ஏலகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர், அடுத்தடுத்த ஆண்டுகளில் நீட் தேர்வில் தகுதி பெற்று எம்பிபிஎஸ் படிப்பிற்கு தேர்வாகி உள்ளனர். இதனால், விவசாயி குழந்தையின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தண்டுகாரம்பட்டி கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எம்பிபிஎஸ் பயில தேர்வான சூரிய பிரகாஷை, தர்மபுரி எம் எல்ஏ வெங்கடேஸ்வரன். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா. பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேலு மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினர்.


இதுகுறித்து தலைமை ஆசிரியர் கூறுகையில், 'குழந்தை - மாதம்மாள் தம்பதி ஏழை குடும்பத்தினர். இவர்களது மகள் சந்தியா, அரசு பள்ளியில் 9ம் வகுப்பு முதல் நன்றாக படித்தார்.


பிளஸ் முடித்ததும், அவர் அரசு நடத்திய பயிற்சி மற்றும் ஆசிரியர்கள் வழிகாட்டுதல் மூலம். எம்பிபிஎஸ் படிக்க தகுதி பெற்றார். இவரது தம்பி ஹரிபிரசாத் நன்கு படித்ததால். அவரது நீட் பயிற்சிக்கு பள்ளியில் பணியாற்றும் சில ஆசிரியர்களே பயிற்சி கட்டணமான ₹25 ஆயிரம் கொடுத்து உதவினர். 


சூரியபிரகாஷூக்கு நீட் இலவச பயிற்சிக்கு பள்ளி நிர்வாகமே சேர்த்து விட்டது. இதனால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருமே நீட் தேர்வில் வெற்றி பெற்று இன்று எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ளனர். இது ஆசிரியர்களாகிய எங்களுக்கும் பெருமையே.' என்றார்.

Post a Comment

0 Comments