மாவட்ட கல்வி அலுவலர்கள், அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள், அனைத்து மேற்பார்வையாளர்கள், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வைத்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வலர்கள் உங்கள் அனைவருக்கும் அன்பான காலை வணக்கம் 🙏.
🌹 வெள்ளிக்கிழமை மாலை 5-30 மணிக்கு தொடங்கி இரவு 7-00 மணி வரை இல்லம் தேடி கல்வித் திட்ட சிறப்பு பணி அலுவலர் ஐயா அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாநில அளவிலான இணைய வழி கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட செய்திகள் பின்வருமாறு.
1. தொடக்க கல்வியில் அரும்பு நிலையில் உள்ள மாணவர்களை ஆசிரியர்களும், தன்னார்வலர்களும், கண்டறிந்து அம் மாணவர்களை மொட்டு& மலர் நிலைக்கு மாற்ற தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
2. ஆசிரியர் பயிற்றுநர்களும் , இல்லம் தேடி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர்களும், ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று அரும்பு நிலை மாணவர்களை இனம் கண்டு அவர்களின் அடைவு திறனை,மொட்டு &மலர் நிலைக்கு மேம்படுத்த முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
3. தொடக்க கல்வி தன்னார்வலர்கள் அனைவரும் பள்ளிக்குச் சென்று அரும்பு நிலையில் உள்ள மாணவர்களின் பெயர் பட்டியலை வாங்கி மாலை நேரத்தில் அவர்களுக்கு தனி சிறப்பு பயிற்சி அளித்தல் வேண்டும்.
4. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களில் யாரும் அரும்பு நிலையில் இல்லாதவாறு கல்வி அலுவலர்கள் கண்காணித்தல் வேண்டும்.
5. இல்லம் தேடி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை சரியாக வழங்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிதல் வேண்டும்.
6. உயர்கல்வி மாணவர்களான 6,7,8- ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வருகை சதவீதம் குறைவாக உள்ளதால் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களும், வட்டார கல்வி அலுவலர் அவர்களும், மேற்பார்வையாளர் அவர்களும் தலைமையாசிரியர் கூட்டத்தில் ஆலோசனைகள் கூற வழிவகை செய்ய வேண்டும்.
நன்றி.
By. ADPC,
தென்காசி மாவட்டம்.
0 Comments