பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.11.2025 வியாழக்கிழமை

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.11.2025 வியாழக்கிழமை.





திருக்குறள்: 


குறள் 358: 

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ் 
செம்பொருள் காண்ப தறிவு 

விளக்க உரை: 


பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.


பழமொழி :

Great achievements require hard work. 

பெரிய சாதனைகள் கடின உழைப்பில் தான் உண்டாகும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1.அறிவே மனிதனின் ஆயுதம் என்பதை நான் அறிவேன்.


2.எனவே மற்றவர்கள் என்ன சொன்னாலும் எனது பகுத்தறிவு கொண்டு முடிவெடுப்பேன்.


பொன்மொழி :

ஒரு முள் குத்திய அனுபவம் வாழ்க்கை முழுவதற்குமான எச்சரிக்கை. -ஜேம்ஸ் ரஸ்ஸல் லோவல்


பொது அறிவு : 

01.இந்திய அரசியலமைப்பின் முகப்புரையை "அடையாள அட்டை" என்று கூறியவர் யார்?

திரு. N.A. பால்கிவாலா
Thiru.N. A.Palkhivala

2.இந்தியாவில் மாணவர் சேர்க்கையின் அடிப்படையில் மிகப்பெரிய பல்கலைக்கழகம் எது?

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
Indira Gandhi National Open University (IGNOU)


English words :

incredible-impossible to believe, industrious, hard-working, and productive


தமிழ் இலக்கணம்: 

 'ந' வரும் இடம் எழுதும் முறை. 'ந' வை தந்நகரம் என்று கூறுவர். காரணம் ந் என்ற ஒற்றெழுத்தை தொடர்ந்து வரக் கூடிய மெய்யெழுத்து த வர்க்கமாக தான் இருக்கும். 
எ.டு. வெந்தயம், பந்து, பந்தயம்.


நவம்பர் 20

திப்பு சுல்தான் அவர்களின் பிறந்தநாள்... 

திப்பு சுல்தான் (நவம்பர் 20, 1750, தேவனஹள்ளி – மே 4, 1799, ஸ்ரீரங்கப்பட்டணம்), மைசூரின் புலியென அழைக்கப்பட்டவர். 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் அரசை ஆண்டவர். திப்பு சுல்தான் ஹைதர் அலியின் இரண்டாம் தாரமான ஃவாதிமாவின் மகனாவார். பிரித்தானியப் படைகளுடனான இரண்டாம் ஆங்கில-மைசூர்ப் போரில் ஹைதர் அலி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாகவிருந்த திப்பு தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூரின் மன்னரானார். ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு அகற்றுவதற்காகப் பிரான்சின் மாவீரன் நெப்போலியனுடன் பேச்சுவார்த்தைகூட நடத்தினார்.மூன்றாம் மற்றும் நான்காம் ஆங்கில-மைசூர்ப் போர்களில் பிரித்தானிய அரசினாலும் அதன் கூட்டுப் படைகளினாலும் தோற்கடிக்கப்பட்டார். மே 4, 1799 ஆம் ஆண்டு தனது ஆட்சித் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் போரின்போது இறந்தார்.


நீதிக்கதை

கந்தசாமி திருநின்றவூரில் பல ஆண்டுகளாக ஒரு ஜவுளிக்கடை நடத்தி வந்தார். கடைத்தெருவில் அவருடைய ஒரு ஜவுளிக்கடை மட்டுமே இருந்ததால், நகரத்து மக்கள் அவரது கடையிலிருந்தே துணிமணிகள் வாங்கி வந்தனர். கந்தசாமி வியாபாரத்தை சிறப்பாக செய்து ஏராளமாக செல்வம் சேர்த்தார். 

ஒருநாள் அதே கடைத்தெருவில் அவருக்குப் போட்டியாக மாணிக்கம் என்ற வெளியூர் இளைஞன் ஜவுளிக்கடையைத் திறந்தான். இளைஞர்களையும், பெண்களையும் கவரும் படி புதிய வகை துணிகளை அவன் விற்பனை செய்ததால், மக்கள் அங்கு குவிந்தனர். கந்தசாமியின் வியாபாரம் மந்தமாகியது. 

மாணிக்கத்தின் மீது பொறாமை கொண்ட கந்தசாமி, அவன் வியாபாரத்தைத் தடுப்பதற்காக, விலை உயர்ந்த நவீன துணிமணிகளை இறக்குமதி செய்தார். கடையையும் பெரிதாக்கி, கண்கவரும் வகையில் அலங்காரம் செய்தார். சினிமா கலைஞர்களை வரவழைத்து தன் கடைக்கு விளம்பரம் செய்தார். இதனால் அவரது சொத்துக்கள் பெருமளவில் கரைந்தன. ஆனாலும் குறைந்த லாபத்தில் அதிக விற்பனை என்ற கொள்கையைக் கொண்டிருந்த மாணிக்கத்தின் கடையில் தான் அதிகமாக வியாபாரம் நடந்தது. 

இதைக் கண்டு கொதித்த கந்தசாமி வேறு வழியின்றி மிகக் குறைந்த லாபத்துக்கு துணிகளை விற்க முன்வந்தார். பல லட்ச ரூபாய் செலவுகளோடு விற்பனையை கணக்கிட்டுப் பார்த்தால், கடைசியில் நஷ்டம் தான் மிஞ்சியது. உடனே மாணிக்கத்தின் மீது பொறாமை கண்மூடித்தனமாக அதிகரிக்க, அவர் தன் சிந்திக்கும் திறனை இழந்தார். மாணிக்கத்தின் கடைக்கு தீ வைக்க, ஒரு கூலிப் படையை ஏவினார். 

ஒருநாள் இரவு மாணிக்கத்தின் கடை தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்த துணிமணிகள், பணம் என அனைத்தும் சாம்பலான பின்தான் கந்தசாமியின் மனது நிம்மதி அடைந்தது. ஆனால் மாணிக்கம் கொடுத்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய காவல் துறையினர், தீ வைத்த கூலிப் படையினரை கைது செய்து விசாரித்தனர். அவர்கள் கந்தசாமியைக் காட்டிக் கொடுத்ததால், அவர் சிறையிலடைக்கப்பட்டார். கந்தசாமியின் கடை சீல் வைக்கப்பட்டது. 

மாணிக்கம் தன் கடையை காப்பீடு செய்திருந்ததால், இழப்புத் தொகை கிடைத்தது, மீண்டும் வியாபாரத்தைத் தொடர்ந்தான். பொறாமையால் அறிவுக்கண் மூடப்பட்டு தீய வழியில் சென்று வெற்றி பெற நினைத்தால், கடைசியில் பெரும் துன்பத்தையே சந்திக்க நேரிடும். 

நீதி :

பொறாமை தன்னிடம் உள்ள சொத்தையும் சேர்த்து அழித்துவிடும்.


இன்றைய செய்திகள்

20.11.2025

⭐விவசாயத்திற்கு உதவி புரிய அரசாங்கம் அனைத்து வழிகளையும் திறந்துவிட்டுள்ளது. இந்தியா இயற்கை விவசாயத்தில் உலக அளவிலான மையப் புள்ளியாக மாறி வருகிறது- பிரதமர் மோடி.

⭐உக்ரைன் மீது ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் ரஷியா சராமாரி தாக்குதல்: 10 பேர் பலி.

⭐ செங்கல்பட்டு-காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலை (NH132B) மற்றும் காஞ்சிபுரம்-திருத்தணி மாநில நெடுஞ்சாலை (SH58) ஆகிய இரண்டு சாலைகளும் 4 அல்லது 6 வழித்தடங்களாக விரிவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஒருநாள் பேட்டர் தரவரிசை: 22நாட்களுக்குள் ரோகித் சர்மாவின் முதல் இடத்தை பறித்த நியூசிலாந்து வீரர் டாரில் மிட்செல்.  ரோகித் சர்மா 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். 3-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் சத்ரான் உள்ளார்.


Today's Headlines

⭐The government has opened all avenues to help agriculture. 
* India is becoming a global hub for organic farming - Prime Minister Modi.

⭐ The Tamil Nadu government is planning to expand both the Chengalpattu-Kanchipuram National Highway (NH132B) and the Kanchipuram-Thirutthani State Highway (SH58) to 4 or 6 lanes.

⭐Russia launches missile and drone attacks on Ukraine, and 10 civilians were killed.

 SPORTS NEWS 

🏀One Day Batsman Rankings: New Zealander Daryl Mitchell dethroned Rohit Sharma to become the World's top  No. 1 batsman in 22 Days. Rohit Sharma has slipped to 2nd place. Afghanistan's Zadran is in 3rd place.

Covai women ICT_போதிமரம்

Post a Comment

0 Comments