கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் அவர்களின் செயல்முறை ஆணைகள்
முன்னிலை : திரு.மா.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப.,
திருவள்ளுவராண்டு 2056/ விசுவாவசு / ஐப்பசி - 26
...6014/2025/..2
नं.12.11.2025
பொருள்
பணியமைப்பு கோயம்புத்தூர் மாநகராட்சி திரு.சி.தாம்சன், மாநகராட்சி கல்வி அலுவலர், கல்விப் பிரிவு, கோயம்புத்தூர் மாநகராட்சி - நிர்வாக நலன் கருதி மாநகராட்சி பணிகளிலிருந்து விடுவித்து ஆணையிடுதல் - தொடர்பாக.
பார்வை
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர், சென்னை அவர்களின் செயல் முறை ஆணை .07.03.2025.
ந.க.எண்.000169/அ1/இ1/2025,
ஆணை
கோயம்புத்தூர் மாநகராட்சி கல்வி அலுவலர் பணியிடத்திற்கு பார்வையில் காணும் பள்ளி கல்வி இயக்குநர். சென்னை அவர்களின் செயல்முறை ஆணையின்படி பணிமாறுதல் மூலம் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வரும் திரு.சி.தாம்சன், மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களை நிர்வாக நலன் கருதி 12.11.2025 முற்பகல் முதல் இம்மாநகராட்சி பணிகளிலிருந்து விடுவித்து ஆணையிடப்படுகிறது.
திரு.சி.தாம்சன், மாவட்டக்கல்வி அலுவலர் தனது தாய் துறையினை தொடர்பு கொண்டு புதிய பணியிடம் பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாணை உடனடியாக அமலுக்கு வருகிறது.
ஆணையர்,
கோயம்புத்தூர் மாநகராட்சி.
![]() |
| தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் எதிர்வரும் திங்கள்கிழமை 17.11.2025 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. |


0 Comments