ஜொள் அதிகாரி... திண்டாடும் ஆசிரியர்கள்..

 ஜொள் அதிகாரி... திண்டாடும் ஆசிரியர்கள்...




cckkalviseithikal

'ஜொள்' அதிகாரி... திண்டாடும் ஆசிரியர்கள்!

மான்செஸ்டர் மாநகரக் கல்வி அதிகாரியான 'சன்' பெயர்கொண்டவர், பயங்கர 'ஜொள்' பார்ட்டியாம். பள்ளிகளில் சத்துணவு சமைக்கும் பெண் ஊழியர்களிடம், 'எனக்கு அடிக்கடி ஸ்பெஷல் உணவு தயாரித்துக் கொடுக்க வேண்டும்' என ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டிருக்கிறாராம். 


இளம் அல்லது நடுத்தர வயது பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளிடம், "ஹேய்... உன் பெயர் என்ன... கல்யாணம் ஆகிடுச்சா..." என்று தனிப்பட்ட விஷயங்கள் குறித்தெல்லாம் கேள்வி கேட்டு, மன்மத வலை விரிக்கிறாராம். 



தனக்கு ஒத்துழைக்காதவர்களை அனைவர் முன்னிலையிலும் ஒருமையில் மிரட்டி, திட்டி, அவமானப்படுத்தி ரசிக்கிறாராம். அதிகாரியின் இந்த சைக்கோத்தனங்களைக் கேள்வி கேட்ட ஆசிரியர் ஒருவரை, தடாலடியாகப் பணியிட மாற்றம் செய்துவிட்டாராம். 


அதிகாரி மீதான புகார்களை, மாநகராட்சி அதிகாரியும் கண்டுகொள்வதில்லை என்று புலம்புகின்றனர் ஆசிரியர்கள்! -விகடன்.

(கோவை மாநகராட்சி கல்வி அலுவலர் திரு.தாமசன் அவர்கள் பற்றிய குற்றச்சாட்டுத் தகவல்.)

Post a Comment

0 Comments