மாறுதல், மனமொத்த மாறுதலுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் & முக்கியக் குறிப்புகள்.

மாறுதல், மனமொத்த மாறுதலுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் & முக்கியக் குறிப்புகள்.



மாறுதல் கோரும் விண்ணப்பங்களை 19.06.2025 முதல் 25.06.2025 அன்று மாலை 6.00 வரை EMIS இணையத்தில் பதிவேற்றம் மேற்கொள்ளலாம்.


25.06.20256 பின்னர் எவ்விதமான மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது எனத் திட்ட வட்டமாக தெரிவிக்கப்படுகிறது.


 தொடக்கக் கல்வி இயகக்கத்தின் கீழ் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள்/ தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ பட்டதாரி ஆசிரியர்கள் / நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொது மாறுதல் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் முறை:


ஒவ்வொரு ஆசிரியரும் மாறுதலுக்கான விண்ணப்பத்தினை விண்ணப்பிக்கும்போது EMIS இணையத்தில் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட Individual Login ID ஐ பயன்படுத்தி EMIS வெளியிடப்பட்டுள்ள மாறுதல் கோரும் படிவத்தில் உரிய விவரங்களை பதிவேற்றம் செய்திடல் வேண்டும். 


அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும்போது ஏதேனும் ஆசிரியர் சார்பான விவரங்கள் தவறுதலாக இருப்பின் (பிறந்த தேதி, பணியில் சேர்ந்த நாள். ஆசிரியரின் பெயர், பள்ளியின் பெயர் மற்றும் இதரவைகள்) அதிலிருந்து வெளியேறி தங்கள் பள்ளிக்கென உள்ள Login IDயில் Teacher Profile சென்று தவறாக உள்ள விவரங்களை சரிசெய்யப்பட்ட பின்னர் மீளவும் தங்களுடைய Individual Login ID யில் சென்று அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டவுடன் Submit செய்திடல் வேண்டும்.


 பொது மாறுதல் சார்பாக வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான அறிவுரைகள்:


ஆசிரியரின் மாறுதல் கோரும் விண்ணப்பத்தினை பெற்ற தொடர்புடைய வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளி Login IDஐ பயன்படுத்தி மேற்படி மாறதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியரின் விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்டவற்றினை View செய்து அனைத்தும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என உறுதி (பணிப்பதிவேட்டுடன் ஒப்பிடுதல்) செய்த பின்னர் முதல் கட்டமாக வட்டாரக் கல்வி அலுவலர் Approval செய்யப்பட வேண்டும்.


மேற்படி வட்டாரக் கல்வி அலுவலர் மாறுதலுக்கு விண்ணப்பித்த சம்மந்தப்பட்ட ஆசிரியர்களின் விண்ணப்பத்தினை Approval செய்யப்பட்ட பின்னர் அதனை மூன்று நகல்கள் எடுத்து ஒன்றினை சார்ந்த ஆசிரியருக்கு சார்பு செய்துவிட்டு மற்றொரு பிரதியினை சம்பந்தப்பட்ட (DEO) மாவட்டக கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலரிடம் ஒப்படைத்திடல் வேண்டும்.


பொதுவான அறிவுரைகள்:


கணவன்-மனைவி (Spouse Priority) முன்னுரிமையில் மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் அவரவர்கள் பணிபுரியும் அலுவலகம் / பள்ளி அரசு மற்றும் அரசுத் துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ளதா என்ற விவரத்தினையும், அதற்கான உரிய அலுவலரிடம் (Competent authority) பெறப்பட்ட சான்றினையும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். 


கணவன். மனைவி பணிபுரியும் இடத்திற்கான தொலைவு 30 கிமீ மேல் உள்ளதை சரிபார்த்து உறுதி செய்யப்பட வேண்டும்.


 மனமொத்த மாறுதல்கள் (Mutual Transfer) கோரியுள்ள விண்ணப்பங்கள் மீது பொது மாறுதல் கலந்தாய்வுகள் முடிந்த பின்னர் இது தொடர்பாக அறிவுரைகள் தனியாக வழங்கப்படும்.


மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களின் விண்ணப்பங்களில் தவறுகள் ஏதும் பின்னர் கண்டறியப்படின் தகுந்த ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


கலந்தாய்வு-ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுகள் பதவி வாரியாக கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என அனைத்து மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.


cckkalviseithikal

முன்னுரிமை உள்ளவர்கள் அதற்கான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். 


ஐந்தாண்டுக்கு மேல் ஒரே பள்ளியில் பணிபுரிபவர்கள், முன்னுரிமை என்பதில் தேர்வு செய்ய வேண்டும்.


முன்னர் பெற்ற மாறுதல் ஆணையை பதிவேற்றம் செய்ய வேண்டும்.


 ஒன்றியத்திற்குள் 

கல்வி மாவட்டத்திற்குள் 

மாவட்டம் விட்டு மாவட்டம்


ஒன்றுக்கு மேல் விண்ணப்பம் அளிக்க உள்ளவர்கள் எதற்கு விண்ணப்பம் அளிக்க உள்ளார்களோ அந்தந்த கட்டங்களில் டிக் கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும்!!


ஒரு விண்ணப்பத்திலேயே ஒன்றுக்கு மேற்பட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.


 ஒவ்வொன்றிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை.

Post a Comment

0 Comments