பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 09.04.2025 புதன்கிழமை.
திருக்குறள்:
பால்: பொருட்பால்
இயல் :குடியியல்
குறள் எண்:1008
அதிகாரம்: நன்றிஇச் செல்வம்
நச்சுப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று.
பொருள்:
எவராலும் விரும்பப்படாதவனின் செல்வம் ஊரின் நடுவே நின்ற நச்சு மரம் பழுத்தது போலாம்.
பழமொழி :
எல்லா மதங்களும் அன்பை போதிக்கின்றன.
All roads lead to rome.
இரண்டொழுக்க பண்புகள் :
* தேர்வு எழுதுவதற்காக நான் அனைத்து பாடங்களையும் நன்கு படித்து தயாராவேன்.
* தேர்வு விடைத்தாளில் அழகாகவும், தெளிவாகவும், பிழை இல்லாமல் எழுதுவேன்.
பொன்மொழி :
வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட, தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப்பார் ,நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்.----ஹிட்லர்
பொது அறிவு :
1. உலகில் அதிக அளவில் மீன் பிடிக்கும் நாடு எது?
ஜப்பான்
2. மின்னஞ்சலின் தந்தை என்று அழைக்கப் படுபவர் யார்?
ரேமண்ட் டாம்லின்சன்
English words & meanings :
Car - சிற்றுந்து
Passenger - பயணியர்
வேளாண்மையும் வாழ்வும் :
குழாயைத் திறந்து விட்டுவிட்டு துணிகளை அலசாமல் ஒரு பக்கெட்டில் நீரைப் பிடித்து வைத்து அலசுங்கள்.
நீதிக்கதை
மனம் திருந்திய மணி
மணி ஒரு சோம்பேறி பையன், அவனை திருத்த நினைச்ச அவனோட அப்பா, அவனுடைய தாத்தாவிடம் அழைத்து சென்று”இவன் ரொம்ப சோம்பேறியாக இருக்கான். என்ன சொன்னாலும் சில பழக்க வழக்கங்களை மாத்தவே மாட்டேங்கிறான். நீங்க தான் அவன திருத்தனும்” என்று சொன்னார்.
தாத்தா ஒரு நாள், அவனை ஒரு காட்டுக்கு அழைத்து போனார். அங்க இருந்த ஒரு சிறிய செடிய பிடுங்க சொன்னார். உடனே ரொம்ப சுலபமா பிடிங்கி விட்டான். அப்புறம் கொஞ்சம் பெரிய செடிய பிடுங்க சொன்னார். கொஞ்ச முயற்சி பண்ணி பிடுங்கினான்.
இன்னும் கொஞ்சம் பெரிய புதர் மாதிரி இருந்ததை பிடுங்க சொன்னார் ரொம்ப கஷ்டப்பட்டு பிடுங்கினான். அதற்குள்அவன் ரொம்ப களைத்து போனான் . அப்புறம் ஒரு பெரிய மரத்தை காட்டி, அதை பிடுங்க சொன்னார். ஆனா அவனால முடியலை. என்னால முடியாது அப்படீன்னு சொல்லிட்டான்.
தாத்தா சொன்னார், ” இது பாரு, இப்படித்தான் நீ சின்ன பையனா இருக்கப்பவே உன்கிட்ட இருக்குற சோம்பலையும், சில கெட்ட பழக்க வழக்கங்களையும் மாத்திக்கணும். அது சுலபமா போய்டும். பெரியவனான்னா அது கிட்ட இருந்து விலகறது ரொம்ப கஷ்டம். விலகவும் முடியாது. உங்க அப்பா சொல்ற மாதிரி கேட்டுநடந்தேன்னா, நீ நல்லா இருப்பே” னு சொன்னார்.
பையனும் அவங்க அப்பா சொன்ன மாதிரி நல்லபடியா நடந்து வாழ்கையில பெரிய ஆளா ஆயிட்டான்.
நீதி: ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது.
இன்றைய செய்திகள்
09.04.2025
* கனிம வளங்கள் கொண்ட நிலங்களுக்கு வரி விதிக்கும் புதிய சட்டம் கடந்த 4-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது என தமிழக அரசு தகவல்.
* காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்காக தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 10 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.
* குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்த தமிழக ஆளுநரின் செயல் சட்ட விரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
* அமெரிக்கா மீது சீனா விதித்த 34 சதவீத வரியை திரும்பப் பெறாவிட்டால் 50 சதவீத கூடுதல் வரி சீனா மீது விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அமெரிக்கா தவறு மேல் தவறு செய்வதாகவும், இது போன்ற அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப்போவதில்லை என்றும் இறுதிவரை போராடுவோம் என்றும் சீனா தெரிவித்துள்ளது.
* ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள நிங்போ நகரில் மார்ச் 8 முதல் 13-ந் தேதி வரை நடக்க உள்ளது.
* ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: மோகன் பகான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
Today's Headlines
* Tamil Nadu Government Information: A new law imposing taxes on lands with mineral resources has come into effect from the 4th of this month.
* Minister K. Ponmudy's Statement in the Legislative Assembly: To prevent the effects of climate change, 100 million saplings have been planted in Tamil Nadu over the past 3 years.
* Supreme Court Verdict: The Supreme Court has ruled that the Tamil Nadu Governor withholding approval for 10 bills for the President's consideration is illegal.
* US-China Trade Tension: US President Trump has warned that if China does not withdraw the 34% tariff imposed on the US, an additional 50% tariff will be imposed on China. In response, China stated that the US is making repeated mistakes, they will not yield to such threats, and they will fight to the end.
* Asian Badminton Championship: The Asian Badminton Championship is scheduled from March 8th to 13th. in Ningbo, China, from March 8th to 13th.
* ISL Football Match: Mohun Bagan team has qualified for the final of the ISL football competition.
Covai women ICT_போதிமரம்
0 Comments