IGNOU, B.Ed பட்டச் சான்று மதிப்பீடு செய்யத் தேவையில்லை. விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டாம் என மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு

IGNOU, B.Ed பட்டச் சான்று மதிப்பீடு செய்யத் தேவையில்லை. விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டாம் என மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு.



cckkalviseithikal

பொள்ளாச்சி, மாவட்டக்கல்வி (தொடக்கக்கல்வி)அலுவலரின் செயல்முறைகள்


பிறப்பிப்பவர்-திரு.கோ.பாரதி.எம்.ஏ.எம்.எஸ்.சி.பி.எட்.எம்.பில் ஓ.மு.எண் 4093/அ3/2025

 நாள் 18.11.2025


திருவள்ளுவராண்டு 2056 விசுவாவசு வருடம்-கார்த்திகை-02


பொருள்-தொடக்கக்கல்வி - ஆசிரியர்களின் கல்விச்சான்றுகனை மதிப்பீடு செய்தல்-தமிழ்நாட்டில் வழங்கப்படும் கல்விச்சான்றுகளுக்கு இணையானது என்று எற்கனவே மதிப்பீடு வழங்கப்பட்டுள்ள நிலையில் தனியாக இணைக்கல்வி சான்று வேண்டி பெறப்பட்ட விண்ணப்பங்கள் -தொடர்பாக


பார்வை


1. அரசாணை எண் 160.பள்ளிக்கல்வி (எம்.2) துறை நாள் 02.12.2004


2. இவ்வலுவலக கடித எண்


ஓ.மு.எண் 3999/அ3/2025 நாள் 10.11.2025


3. பொள்ளாச்சி தெற்கு, வட்டாரக்கல்வி அலுவரின்


ந.க.எண் 2184/ஆ1/2025 நாள் 07.11.2025


ந.க.எண் 2186/ஆ1/2025 நாள் 07.11.2025


பார்வை 1 ல் காண் அரசாணையின் படி நியூடெல்லி, இந்திராகாந்தி தேசிய திறந்தவெளிப்பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எட் ( B.Ed) பட்டச்சான்று தமிழகப் பல்கலைக்கழங்களால் வழங்கப்படும் பி.எட் பட்டத்திற்கு இணையாக பள்ளி உதவி ஆசிரியர்கள் நேரடி பணி நியமனம் மற்றும் பதவி உயர்விற்கு கருதலாம் அரசாணையிட்டுள்ளது. பார்வை 2 இல் காணும் இவ்வலுவலக கடிதத்தின்படி நியூடெல்லி, இந்திராகாந்தி தேசிய திறந்தவெளிப்பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எட் (B.Ed) பட்டச்சான்றுக்கு தனியாக மதிப்பீடு செய்யத்தேவையில்லை என 10.11.2025 ம் நாளிட்ட இவ்வலுவலக செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொள்ளாச்சி தெற்கு வட்டாரக் கல்வி அலுவலகத்திலிருந்து தொடர்ந்து (B.Ed) பட்டச்சான்றுக்கு தனியாக மதிப்பீடு கோரி விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.


இனி வருங்காலங்களில் கருத்துருக்கள் அனுப்பி வைக்கப்படுவதை தவிர்க்குமாறு தெரிவிக்கப்படுகிறது. நியூடெல்லி, இந்திராகாந்தி தேசிய திறந்தவெளிப்பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எட் (B.Ed) பட்டச்சான்றுக்கு தனியாக மதிப்பீடு செய்யத்தேவையில்லை என அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.


இணைப்பு:


cckkalviseithikal


கருத்துரு

மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) பொள்ளாச்சி

Post a Comment

0 Comments