பணியில் உள்ள ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வு நடத்துதல் குறித்து விவாதிக்க சங்கத் தலைவர்களுக்கு அழைப்பு

 பணியில் உள்ள ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வு நடத்துதல் குறித்து விவாதிக்க சங்கத் தலைவர்களுக்கு அழைப்பு.



தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை -6.


பொருள் :

தொடக்கக் கல்வி தகுதி தேர்வு ---சார்நிலைப் பணி ஆசிரியர் அனைத்து ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கூட்டம் 21.11.2025 அன்று மாலை 5.00 மணியளவில் நடைபெறுதல் - சார்பாக.


மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக 21.11.2025 மாலை 5.00 மணியளவில் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள புதிய கட்டட முதல் தள கூட்ட அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஓர் அமைப்பிற்கு ஒருவர் என்ற வீதத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


cckkalviseithikal


தொடக்கக் கல்வி இயக்குநர்


பெறுநர்


அனைத்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள்


2017/5


நகல்


1. அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, தலைமைச் செயலகம், சென்னை-09 தகவலுக்காக பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது.


2. மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் சிறப்பு நேர்முக உதவியாளர் அவர்களுக்கு கனிவுடன் அனுப்பப்படுகிறது.

Post a Comment

0 Comments