வட்டார அளவிலான உயர் கல்வி போட்டித் தேர்வு பயிற்சி மையங்களில் முதுகலை ஆசிரியர்களை சுழற்சி முறையில் நியமிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.
Click here
பார்வை 1 ல் காணும் மாதிரி பள்ளிகள் கடிதத்தின்படி 2025 2026 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்ல ஏதுவாக பள்ளிக் கல்வி இயக்ககத்தின் வாயிலாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எழுத இதன் தொடர்ச்சியாக, உயர்கல்விக்கான போட்டித் தேர்வுகள் விருப்பமுள்ள மாணவர்களுக்கென, வட்டார அளவிலான உயர்கல்வி வழிகாட்டி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வுகளுக்கு தயார்படுத்துவதற்காக இந்த ஆண்டு, 38 மாவட்டங்களிலிருந்து உயர் தொழில்நுட்ப ஆய்வக வசதியுள்ள 236 வட்டாரங்களில் உயர்கல்வி வழிகாட்டி மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இம்மாணவர்களின் உயர்கல்வி விருப்பத்திற்கேற்ப உரிய பயிற்சிகள் வழங்கவும். கிளை பள்ளி (Spoke School) தலைமையாசிரியர்களின் மூலமாக அப்பள்ளிகளில் 12-ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களில், இப்பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்களும். வட்டார அளவிலான உயர்கல்வி வழிகாட்டி மையங்களில் சனிக்கிழமைகளில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொண்டு உயர்கல்வி சேர்க்கைக்கான பல்வேறு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பெற்றுக் கொண்டு போட்டித் தேர்வுகளுக்காக தங்களை தயார்படுத்திக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்காண் வட்டாரங்களிலுள்ள பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டி மையங்கள் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று ஜே.ஈ.ஈ.(JEE) மருத்துவம் சார்ந்த படிப்புகள், வணிகவியல் மாணவர்களுக்காக CUET ஆகியவற்றிற்கு மாதிரிப் பள்ளிகளின் ஒருங்கிணைப்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
cckkalviseithikal
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இணைப்பில்
கண்டுள்ள வட்டார மைய பள்ளிகளில் நடைபெறும் பயிற்சியில் இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், கணக்குப் பதிவியல், வணிகக் கணிதம் ஆகிய முதுகலை பாட ஆசிரியர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளதை செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. உறுதி
மேலும் இப்பயிற்சிகள் தங்கு தடையின்றி நடைபெற ஏதுவாக, சார்ந்த வட்டாரத்திலுள்ள மையப் பள்ளித் தலைமை ஆசிரியர்/ மையப் பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் ஒவ்வொரு வாரமும் பணிபுரிவதை உறுதி செய்திடவும் தெரிவிக்கப்படுகிறது.
சனிக்கிழமைதோறும் இப்பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள்/உதவித் தலைமையாசிரியர்களுக்கு மதிப்பூதியம் ரூ.1000/-(ரூபாய் ஆயிரம்) மாதிரிப் பள்ளிகள் வழியாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஆகவே, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் மேற்கண்ட அறிவுரைகளை உரிய முறையில் செயல்படுத்தி. ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள்/உதவித் தலைமையாசிரியர்கள் பற்கேற்பையும் இப்பயிற்சி வகுப்புகள் தடையின்றி நடைபெறுவதையும் உறுதி செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments