2025-26 ஆம் கல்வியாண்டில் வானவில் மன்ற செயல்பாடுகள் தொடங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

 2025-26 ஆம் கல்வியாண்டில் வானவில் மன்ற செயல்பாடுகள் தொடங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

Click here




மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை தானாக பரிசோதனை செய்து கற்றலை மேம்படுத்துவதற்காக திருச்சியில் 2022 நவம்பர் 28 அன்று வானவில் மன்றம் நடமாடும் அறிவியல் ஆய்வகம் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இத்திட்டத்திற்கென 2025-2026ஆம் ஆண்டு நிதிஒதுக்கீடு மற்றும் அனுமதி பார்வை(6)ல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை பள்ளிக் கல்வித் துறையோடு இணைந்து மாநில அளவில் ஒருங்கிணைக்கும் பணியை 710 வானவில் மன்ற கருத்தாளர்கள் மற்றும் ஐந்து மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் மூலமாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மேற்கொள்ள உdiளார். வானவில் மன்ற வகுப்புகள் ஜூலை 21 முதல் தொடங்கப்பட உள்ளன. முதலாம் பருவத்திற்கான ஜூலை மாத அறிவியல் மற்றும் கணித பரிசோதனைகள் சார்ந்து மாநில அளவிலான முதன்மைக் கல்வி கருத்தாளர்களுக்கான பயிற்சி ஜூலை 17ல் இணைய வழியில் நடைபெற உள்ளது.

cckkalviseithikal


மாநில அளவில் பயிற்சி பெற்ற முதன்மைக் கருத்தாளர்களால் மாவட்ட அளவிலான பயிற்சி அந்தந்த மாவட்டங்களில் உள்ள வானவில் மன்ற கருத்தாளர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில், வானவில் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளரின் மேற்பார்வையில் ஜூலை 18ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. வானவில் மன்ற கருத்தாளர்கள் ஜூலை 21 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்குச் செல்லவும் அனுமதி அளிக்கப்படுகிறது.


எனவே. இவ்விவரங்களை சார்ந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை), மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுத்திட அறிவுறுத்திடுமாறு தெரிவிக்கப்படுகின்றது.

இயக்குநருக்காக

Post a Comment

0 Comments