ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை!! மாத இறுதியில் ஓய்வு! பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
Proceedings 👇
Click here
அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணி மறு நியமனம், பள்ளி இறுதி வேலை நாள் (ஏப்ரல் 30) வரை மட்டுமே வழங்கப்படும்.
மே மாதம் பணி நீட்டிப்பு வழங்க இயலாது.
கல்வி ஆண்டின் இறுதிவரை (மே 31) பணி நீட்டிப்பு வழங்க வேண்டாம் என உத்தரவு.
அரசாணை (நிலை) எண்.115 பள்ளிக்கல்வித் (ப.க5(2)) துறை, நாள்.28.06.2022 -இல் அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஓய்வு பெற்று மறுநியமனம் வழங்கும் போது கல்வியாண்டு கடைசி வேலை நாள் வரை (Upto the end of Academic Session) மறுநியமனம் வழங்க அனுமதி அளித்து ஆணையிடப்பட்டதை திருத்தம் செய்து கல்வியாண்டின் இறுதி நாள் (மே 31-ஆம் தேதி) வரை மறுநியமனம் வழங்க அனுமதி அளித்து ஆணை வழங்க அரசிடம் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் பார்வை 2-ல் காணும் கடிதம் மூலம் அரசாணை (நிலை) எண்.115 பள்ளிக்கல்வித் (ப.க5(2)) துறை, நாள்.28.06.2022 -இல் அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஓய்வு பெற்றபின் மறுநியமனம் வழங்கும் போது கல்வியாண்டின் இறுதி நாள் (மே 31-ஆம் தேதி) வரை மறுநியமனம் செய்யும் கோரிக்கையினை ஏற்க இயலாத நிலை உள்ளது என அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
இணைப்பு - பார்வை 2-ல் காணும் அரசு கடிதம் நகல்
cckkalviseithikal
பள்ளிக்கல்வி இயக்குநர்
0 Comments