இன்று 11.04.2025 சமத்துவ நாள் (Equality day) உறுதிமொழி எடுக்க உத்தரவு.

 இன்று 11.04.2025 சமத்துவ நாள் (Equality day) உறுதிமொழி எடுக்க உத்தரவு.


Click here




சமத்துவ நாள்


உறுதி மொழி


சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும்,

சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி,

ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும்,

ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும்,

வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து,

எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய,

நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்க ளுடைய பிறந்த நாளில்,

சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க

நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும்,

சகமனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும்,

சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன்.



Post a Comment

0 Comments