IFHRMS இல் பில் தயார் செய்வது குறித்து கருவூல ஆணையரின் அறிவுறுத்தல்கள்.
இன்று (13.10.2023) மதிப்பிற்குரிய ஆணையர், கருவூலம் மற்றும் கணக்குத்துறை, சென்னை அவர்களின் மீளாய்வு கூட்டத்தில் கீழ்க்கண்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
1) IFHRMS மென்பொருளில் *e-Challan* ல் ஏற்கெனவே இருந்த பணம் செலுத்துதல் நடைமுறையில், தற்பொழுது *RBI* க்கு நேரிடையாக பணம் செலுத்தும் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த முறையில் செலுத்தப்படும் பணம் உடனுக்குடன் அரசுக்கணக்கில் சேர்க்கப்பட்டுவிடும். இந்த முறைக்கு Payments Mode ல் *All Banks* என்பதை தெரிவு செய்ய வேண்டும். எனவே, இந்த புதிய வசதியை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள *பிற வங்கிகள் வழியிலான(SBI,IOB,IB,...)* மூலமும் பணம் செலுத்தலாம். ஆனால், இந்த முறையில் செலுத்தப்படும் பணம் அரசு கணக்கில் சேர்வதற்கு ஓரிரு நாட்கள் ஆகும் என்று தெரிவிக்கப்படுள்ளது.
மேலும், *Tahsildar, Office,SRO Office போன்ற. e-Challan* வழியாக பொதுமக்கள், நிறுவனங்கள் ...மூலம் அரசுக்கு வரவினங்கள் பெறப்படும் நேர்வில், குறித்த e-Challan ஐ *உண்மையானதா* என்பதை IFHRMS ல் சரிபார்க்கவும். ஏனெனில், ஒரு சில மாவட்டங்களில் *போலியான e-Challans* பெறப்பட்டு அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது. இதை சரிபார்க்கும் வசதி IFHRMS ல் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2) வரும் *ஜனவரி 2024 முதல் CPS* முறையில் ஓய்வு பெறுவோர்களுக்கான ஓய்வூதிய பலன்கள் *CPS Final Payments* , இனி மேல் *CPS eAuthorizations* ஆக IFHRMS வழியாக மட்டுமே பெறப்பட்டு பட்டுவாடா செய்யப்பட உள்ளது. இதற்கான வசதிகள் 15.10.2023 முதல் IFHRMS மென்பொருளில் செய்யப்பட உள்ளன. எனவே, ஜனவரி 2024 மாதம் முதல் ஓய்வு பெறும் CPS பணியாளர்களின் ஓய்வூதிய கருத்துருக்கள் IFHRMS வழியாக மட்டுமே செயல்படுத்தவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. *டிசம்பர் 2023* வரை ஓய்வு பெறுபவர்களுக்கு *Online (IFHRMS) and Offline (Manuel)* வழிகளில் போன்ற இரு வழிகளில் *CPS Final Payments* கருத்துருக்கள் அனுப்பப்பட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3) மேலும், தங்கள் அலுவலக பணியாளர்களின் *Payroll* ல் சுய விபரங்களில் *(Personal Informations)* ஏதேனும் தவறு (பெயர், ஆதார் உள்ளிட்ட விபரங்கள்) இருந்தால் அவற்றை சார்ந்த DDO'S வே சரி செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளன . அவ்வாறு செய்யப்படும் மாற்றங்கள் உடனுக்குடன் குறித்த பணியாளரின் *e-SR* பகுதியிலும் புதுப்பிக்கப்பட்டுவிடும். இது குறித்து *Tickets* ஏதும் செய்ய வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4) Payroll ல் *Duplicate Payments Icon* ல் பெறப்படும் தரவுகளை கூர்ந்து ஆய்வு செய்து, சார்ந்த DDO'S *Yes or No* என்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக *Special Tahsildar(SSS)*, *அலுவலக மாதாந்திர. OAP Bills* ஐ கூர்ந்தாய்வு செய்த பின்பு பட்டியலை ஒப்புதல் செய்யவும். இதில் மிகப்பெரும் அளவிலான நிதி முறைகேடுகள் பிற மாவட்டங்களில் கண்டறிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5) சம்பளப்பட்டியலில், திருத்தங்கள் ஏதேனும் செய்து *MFR(Marked for Retry)* செய்தால், குறித்த தீர்வு பெற அன்றைய தினம் இரவு வரை காத்திருக்கவும். அந்த இரவுக்குள் தானாக குறித்த விபரங்கள் புதுப்பிக்கப்பட்டுவிடும். இதற்காக *Tickets ஏதும் Raise செய்யக்கூடாது.* என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6) *சம்பளமில்லா பட்டிகளை (Non Salary Bills)* பொறுத்த மட்டில், *சார்ந்த DDO'S, குறித்த பட்டிகளின் வன் நகலில் ஒப்புதல் வழங்கிய பின்பு IFHRMS ல் Treasury க்கு Forward செய்யவும்.* ஏனெனில், குறித்த பட்டிகள் IFHRMS ல் கருவூலத்தில் பெறப்பட்டு, அதன் வன் நகல் பெறப்படாத நேர்வில், *Treasury Notification* பெறப்பட்ட மூன்றாவது நாள் *மாலை* *05.00* மணியளவில் இவ்வலுவலகத்தால் *Reject* செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments